சினிமாபொழுதுபோக்கு

கிளோஸப்பில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா..

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் சமந்தா தனது வலைப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழில் வெளியான மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கானாவை சேர்ந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே தமிழில் பேசுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் முழுக்க முழுக்க வசித்தது எல்லாமே சென்னை தானாம். வீட்டிலும் ஸ்கூலிலும் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்ற கட்டாயத்தால் இருந்தாராம்.

மேலும் இவருக்கு யசோதா என்ற மறுபெயரும் உண்டு. இவருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இவரை யசோதா என்று அழைப்பார்களாம். மேலும் மக்கள் மத்தியிலும் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் இவர் ஒரே மாதிரி நேரத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருக்கு முதலில் வரவேற்பு கிடைத்தது என்னவோ தெலுங்கில் தான். இவரது முதல் படமும் நாகசைதன்யாவுடன் தான். அப்பொழுது ஆரம்பித்த நட்பு தான் இப்பொழுது திருமணம் வரை முடிந்துள்ளது. அடுத்து அவர் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் செம ஹிட் அடித்தது.

அடுத்ததடுத்து சமந்தாவிற்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் பல கிசுகிசுக்களிலும் சிக்க ஆரம்பித்தார். தெலுங்கு நடிகரான சித்தார்த் உடன் அடிக்கடி வெளியில் செல்வதால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இதனை கலாய்த்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ஆனால் சமந்தா எதையும் கண்டுக்கொள்ளவும் இல்லை. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவின. சமந்தா தனக்கு வரும் எந்த வதந்தியையும் பெரிதாக எடுத்துக்கொண்டதும் கிடையாது. தற்போது வரை தனது விடா முயற்சியால் மட்டுமே முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.

149013222 422094845737726 8782622326388433517 n 1

சிலருக்கு திருமணம் ஆனதும் திரையுலகில் மார்க்கெட் குறைந்து விடும். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி இல்லை. தொடர்ந்து முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். மேலும் பல போட்டோஷூட்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சம்மு தற்போது வரை ரசிகர்களை தன் வாசம் கட்டிபோட்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!