தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – அமைச்சர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மது விற்பனை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிற மதுபானங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இது தொடர்பாக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மருத்துவமனை, பள்ளிக்கு அருகே உள்ள மதுபான கடை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!!
Back to top button
error: