வேலைவாய்ப்பு

ரூ.67,700/- ஊதியம் BARC நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அழைப்பை வெளியிட்டு உள்ளது. அதில் Medical/ Scientific Officer – D (Hospital Administrator) , Scientific Officer-C (Veterinary Surgeon) ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – BARC
பணியின் பெயர் – Medical/ Scientific Officer – D & Scientific Officer-C
பணியிடங்கள் – 02
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

பாபா அணு ஆராய்ச்சி மையமானது Medical/ Scientific Officer – D (Hospital Administrator), Scientific Officer-C (Veterinary Surgeon) ஆகிய பதவிக்காக 02 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் Medical / Scientific Officer – D (Hospital Administrator) பதவிக்கு 40 வயதும், Scientific Officer-C (Veterinary Surgeon) பதவிக்கு 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

  • Medical/ Scientific Officer – D – MBBS with Post Graduate Diploma in Hospital Administration தேர்ச்சியுடன் 3 வருடங்கள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Scientific Officer – D – B.V.Sc & AH (5 1⁄2 years programme) மற்றும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Medical/Scientific Officer – D – ரூ. 67,700/-
  • Scientific Officer – D – ரூ.56,100 /-

தேர்வு செயல்முறை :

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

  • General மற்றும் பிற – ரூ. 500/-
  • SC/ ST/ Women / PWD – கட்டணம் இல்லை.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27/08/2021 முதல் 11/09/2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: