இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் ம் தேதிக்குள் சம்பள உயர்வு – செம்ம அறிவிப்பு!!

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை குறித்த அறிவிப்புகள் ஜனவரி 26ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி (DA) தொகையை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து DA உயர்வுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. ஏனென்றால் இந்த DA உயர்வை செயல்படுத்துவதில் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. என்றாலும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கலாம் என ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போது ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயரும்.

அதே வேளையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18,000 தொகையை ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் ஜனவரி 26ம் தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி குறித்து முக்கிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டரின் கீழ் சம்பளம் பெற்று வருகின்றனர். இந்த ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 ஆக உயரும். தவிர 3.68 சதவீத ஃபிட்மென்ட் பேக்டரில் அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.

இது தொடர்பான அடிப்படை கணக்கீடுகளின்படி, மத்திய அரசு தனது ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை 3.68 சதவீதமாக உயர்த்தினால், அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும். தற்போது, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என்றால், அவர்கள் ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) வரை மாதச் சம்பளமாகப் பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாருக்கு தினசரி 8 மணிநேரம் மட்டுமே வேலை!!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: