தமிழ்நாடுமாவட்டம்

ஆசிரியர்கள், மாணவர்கள் கவனத்திற்கு.. பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்..

தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு வருவது குறித்த அச்சம் நிலவி வருகிறது. அதனை தடுக்கும் விதத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

மத்திய – மாநில அரசுகள் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகள் குறித்த அறிவிப்பினை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இதில் பள்ளி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி சரியான முறையில் கடைபிடிப்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

அரசு வெளியிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள்:

1. பள்ளிக்கு வரும்போது மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

2. அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

3. மாணவர்களுக்கு இடையே சமூக இடைவெளி விட்டு அமர வேண்டும்.

4. மாணவர்களின் மதிய உணவு, குடிநீர், பேனா, நோட்டு புத்தகங்களை போன்றவற்றை பரிமாறி கொள்வதை தடுக்க வேண்டும்.

5. மாணவர்கள் பள்ளி இடைவெளியில் கூட்டமாக சுற்றுவதை தடுக்க வேண்டும்.

6. பள்ளி வளாகங்களை கிருமிநாசினி கொண்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுத்தம் செய்ய வேண்டும்.

7. மாணவர்கள் பள்ளி முடிந்து செல்லும் போதும், பள்ளிக்கு வரும் போதும் தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும்.

8. ஒரு வகுப்பில் 25க்கு மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்க கூடாது.

9. மாணவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

10. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நெருக்கமாக நின்று பாடங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

11. மாணவர்கள் ஒரே சமயத்தில் கழிவறை செல்வதை தவிர்க்க வேண்டும். கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.

12. பள்ளி நிர்வாகம் மாணவர்களின் உடல்நிலையை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.

Back to top button
error: Content is protected !!