இந்தியா

BREAKING: இஸ்ரோவின் புதிய தலைவராக எஸ்.சோம்நாத் நியமனம்!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) இயக்குநரும் இஸ்ரோவின் முதன்மை விஞ்ஞானியுமான சோம்நாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) புதிய தலைவராக சோம்நாத் (எஸ். சோம்நாத்) நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த VSSC இயக்குநர் எஸ். சோம்நாத் நாட்டின் சிறந்த ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் விண்வெளி பொறியாளர் ஆவார்.

விஎஸ்எஸ்சிக்கு முன் எஸ். சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராகவும் இருந்துள்ளார். இஸ்ரோவின் ராக்கெட்டுகளின் வளர்ச்சியில் அவர் நிறைய பங்களித்துள்ளார். ஏவுகணையை வடிவமைத்ததில் தலைசிறந்தவர் சோம்நாத். அவர் ஏவுகணை வாகன அமைப்புகள் பொறியியல், கட்டமைப்பு வடிவமைப்பு, கட்டமைப்பு இயக்கவியல் மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகியவற்றில் நிபுணர்.

உலகின் 6வது மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதே இதன் முதன்மைப் பணி. தமிழ்நாட்டைச் சேர்ந்த கைலாசவடிவு சிவன், இஸ்ரோவின் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

FI50wd9XsAE8Ubp


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: