இந்தியாதமிழ்நாடு

ரஷ்யாவின் Sputnik-V தடுப்பூசியை அவசர காலத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதி..!

ரஷ்யாவின் Sputnik-V தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கொரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது கொரோனா பாதித்தோர் எண்ணிக்‍கை ஒரு கோடியே 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாக்‍சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 10 கோடி பேருக்‍கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளுக்‍கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிதீவிரமாகப் பரவும் கொரோனாவை சமாளிக்‍கும் வகையில், ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அவசர காலத்திற்கு பயன்படுத்தக்‍கூடிய மருந்தாக Sputnik V கொரோனா தடுப்பூசியை உபயோகித்துக்‍ கொள்ளலாம் என இந்திய தலைமை மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் Sputnik V கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் 60-வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: