வேலைவாய்ப்பு

ரூ.70,000/- சம்பளம் ICMR NIE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Consultant, Research Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – ICMR NIE
பணியின் பெயர் – Consultant, Research Assistant
பணியிடங்கள் – 03
நேர்காணல் தேதி – 24.08.2021

காலிப்பணியிடங்கள் :

ICMR-NIE நிறுவனத்தில் Consultant, Research Assistant பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Research Assistant – 33 வயது
Consultant – 70 வயது

கல்வித்தகுதி :

Consultant – Epidemiology/ Applied Epidemiology/ Public Health/ DPH/ Microbiology/ Biotech/ Zoology/ Bioinformatics/ Veterinary Science இவற்றில் ஏதேனும் ஒன்றில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Research Assistant – Microbiology/ Zoology/ Biotech/ Veterinary Science/ Zoology/ Bioinformatics இவற்றில் UG/ PG தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 24.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது.

முகவரி – ICMR-NIE: National Institute of Epidemiology, Ayapakkam, Chennai-600077.

Official PDF Notification – https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45.pdf

இதையும் படிங்க:  ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: