வேலைவாய்ப்பு

ரூ.61,400 சம்பளம் NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (KKNPP) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Civil, Mechanical பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. மேலும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – KKNPP
பணியின் பெயர் – Civil, Mechanical
பணியிடங்கள் – 34
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (KKNPP) Civil, Mechanical பணிகளுக்கு என 34 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil, Mechanical பாடப்பிரிவில் சம்பந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும். மேலும் இதில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Civil மற்றும் Mechanical பதவிகளுக்கு விண்ணப்பவரின் வயது வரம்பானது (18.09.2021 தேதியின்படி) 35 பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விண்ணப்பிப்பவர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

npcil notice


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Back to top button
error: