இந்தியா

அரசு சார்பில் ரூ.6000 உதவித்தொகை – சலுகையை பெற தகுதியானவர்கள் யார்?

விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்ற திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பலன் பெற தகுதியானவர்கள் மற்றும் அதன் நிபந்தனைகள் இப்பதிவில் காண்போம்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது விவசாயிகளிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த நிதி வரவு வைக்கப்படுகிறது. மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ.75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த கிசான் திட்டத்தின் 9வது தவணையை, ஆகஸ்ட் 9 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி ரூபாய் 19,500 கோடிக்கு மேலான தொகை 9.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

கிசான் திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள்:

  • ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் நன்மைகளை அனுபவிக்க முடியாது.
  • விவசாயிகள் அரசுக்கு வரி செலுத்தினால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.
  • ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற வேலைகளுக்காக அழித்தாலோ அல்லது மற்றவர்கள் விவசாயம் செய்தாலோ கிசான் திட்டத்த்தின் கீழ் பணம் பெற முடியாது.
  • விவசாயம் செய்பவர் நிலம் வீட்டில் வேறு ஒருவர் உடையவர் பெயரில் இருந்தால் இந்தத் திட்டத்தின் பலனை பெற முடியாது.
  • விவசாய நிலத்தின் உரிமையாளர் ஒரு அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியராகவோ இருக்க கூடாது.
  • தொழில்முறை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கிசான் சம்மன் நிதி யோஜனா சலுகைகளை அனுபவிக்க தகுதியற்றவர்கள்.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அசாம் மாநிலத்தில் செப்.6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
Back to top button
error: