இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – அரசு முடிவு!!

கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ. 5,000 நிவாரணமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ ஆரம்பித்தது. ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்ச நிலையை அடைந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு கர்நாடகா மாநில அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டது.

கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாதந்தோறும் அரசு ஊதியம் வழங்கி விடுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளது. தனியார் பள்ளியில் மாணவர்கள் வருகை இல்லாததால் முழு கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் பள்ளி நிர்வாகத்தினரால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.

இந்நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசு தங்களுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை ஏற்று கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள 1,72,945 தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 34,000 ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.103.47 கோடி நிதி கல்வித்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: