இந்தியா

கொரோனாவால் வேலையிழந்தோருக்கு மாதம் ரூ.5,000 – டெல்லி முதல்வர் அறிவிப்பு!!

கொரோனா தாக்கத்தால் சுற்றுலா சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் அவர்களது குடும்பத்திற்கு மாதம் ரூ. 5,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதால் அப்பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில்கள், திருவிழாக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் முதலியவற்றிற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் விளைவாக கொரோனா பரவும் விகிதம் குறைய தொடங்கியது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக விமான சேவை நிறுத்தபட்டதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர முடியாத சூழல் நிலவியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் சுற்றுலா சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்யப்படும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தீவிரம் காரணமாக சுரங்க வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுரங்கங்களை மூடுவதால் அதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சுரங்க பணிகள் மீண்டும் தொடங்கும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா தாக்கத்தினை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
Back to top button
error: