தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் – அரசாணை வெளியீடு!!

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பணியின் போது இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறை அலுவலகங்களில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு சிறப்பான ஊதியத்துடன் கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அரசுத்துறை ஊழியர்கள் கேட்கும் சில முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறது. இது தவிர அரசு ஊழியர்களுக்கென சில பிரத்தேயகமான அதிரடி அறிவிப்புகளும் சமீபகாலமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசுத்துறை ஊழியர்கள் ஒருவேளை பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ.3 லட்சம் நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு அரசுத்துறை ஊழியர்களிடம் இருந்தும் மாதந்தோறும் ரூ.60 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனை கருத்தில் கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அரசு, இனி பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக ரூ.5 லட்சம் வரை வழங்க ஒப்புதல் அளித்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து இனி ரூ.110 பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (செப்.21ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Back to top button
error: