இந்தியா

ரூ.5 லட்சத்தை கரைத்த கரையான்கள்.. கலைந்த விவசாயியின் கனவு..

சொந்த வீடு அனைவருக்கும் ஒரு வாழ்நாள் கனவு. இரவுபகல் பாராது அயராது உழைத்து அந்த கனவை அடையும் போது எதிர்பாராத அசம்பாவிதங்களால் நமது கனவு தகர்க்கப்படும் போது ஏற்படும் வலி அளவிட இயலாதது. அதே போன்ற சம்பவம் தான் விவசாயி ஒருவருக்கு நடந்துள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜாமலையா, வங்கிக்கணக்கு இல்லாததால் தனது வீட்டிலேயே இரும்புப்பெட்டியில் பணத்தை சேமித்து வந்த நிலையில் சுமார் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் சல்லடையாக துளைத்து விட்டன.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி ஜாமலையா, “வீடு கட்டும் கனவை கரையான்கள் களைத்து விட்டதாக” வேதனை தெவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!