வேலைவாய்ப்பு

ரூ.47,000/- ஊதியம் தமிழக மின்சார துறையில் புதிய வேலைவாய்ப்பு!!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30/09/21 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அரசு வேலைக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை எங்கள் வலைப்பதிவுன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
பணியின் பெயர் – Personal Assistant & assistant
பணியிடங்கள் – 3
விண்ணப்பிக்கும் தேதி – 30/09/21
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

  • Personal Assistant to Director – 01
  • Assistant (Legal) – 1
  • Assistant – 1

வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1.1.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

தனிப்பட்ட உதவியாளர் – பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Senior Grade ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

உதவியாளர் (சட்டம்) – சட்டத்தில் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங்கில் சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் – வணிகவியல் முதுகலை பட்டம்/ ICWA / CA இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்ரைட்டிங் ஆங்கில சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜிஎஸ்டி படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Personal Assistant to Director – ரூ.45,000/-
  • Assistant (Legal) – ரூ.26,000-
  • Assistant – ரூ.26,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் shortlist செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் வயது, தகுதி, சமூகம், அனுபவம், ஆகிய விவரங்களை நன்கு ஆராய்ந்து “செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4 தளம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டிடம், திரு.வி.கா தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 ” என்ற முகவரிக்கு 30.09.2021 க்குள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification – https://drive.google.com/file/d/1ZnFNDp-NwqA3kPM6jrLoK5imC05Yh7Zj/view


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தால் போதும்!!
Back to top button
error: