தமிழ்நாடு

அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள் அரசு வழங்கி வரும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையில் பதிவு செய்வதன் மூலமாக மூத்த தமிழ் அறிஞர்கள் அரசு வழங்கும் உதவித் தொகையினை பெற முடியும். அதன்படி, இந்த ஆண்டு (2021-22) இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விண்ணப்பதாரர் ஜனவரி 2021 ஆம் நாளில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதே போல் ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் பெறப்பட்ட வருமான வரி சான்றிதழ், தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச்சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tamilvalarchithurai.com என்பதில் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு மூலமாக தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு மாதம் 3,500 ரூபாயும், மருத்துவப்படி, 500 ரூபாயும் அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: