இந்தியா

மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் திட்டம்!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக செயல்படுத்தி வரும் ‘கிசான் மந்தன் யோஜன’ திட்டத்தின் கீழ் மாதம் விவசாயிகள் தங்களது ஓய்வு காலத்தில் பயனடையும் வகையில் மாதந்தோறும் ரூ.3000 பெறும் சிறப்பு பென்ஷன் சலுகையை அனுபவிக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் முக்கியமான ஒன்று ‘கிசான் மந்தன் யோஜன திட்டம்’ ஆகும். இந்த திட்டம் மூலம் அரசு வழங்கும் நிதி உதவியை பெற்று நாடு முழுவதும் உள்ள பல ஆயிரகணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரூ.6 ஆயிரம் நிதி உதவி தொகையானது ஆண்டு தோறும் 3 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறும் கூடுதல் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்புகளை பொருத்தளவு, 18 முதல் 40 ஆக இருக்க வேண்டும். அதன் கீழ் விவசாயிகள் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக சில வரைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது பென்ஷன் உதவி பெற விரும்பும் விவசாயிகள் 18 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 30 வயதில் இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதந்தோறும் ரூ.1000 செலுத்த வேண்டும்.

மேலும் விவசாயிகள் 60 வயது ஆனவுடன் வயதில் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டும் என்பது அவசியமானதாகும். அப்படி செய்தால் ஓய்வு காலத்தில் ரூ.3000 வரை பென்ஷன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இதற்கான முக்கிய ஆவணங்களாக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை தேவைப்படுகிறது. இதனை கொண்டு தகுதியுடைய விவசாயிகள் தங்களது ஓய்வு காலத்தில் பென்ஷன் தொகையை அனுபவிக்க முடியும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு சார்பில் ரூ.6000 உதவித்தொகை – சலுகையை பெற தகுதியானவர்கள் யார்?
Back to top button
error: