இந்தியா

வீட்டுக்கு ஒரு அரசு பணி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 – டெல்லி முதல்வர் உறுதி!!!

கோவா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை மற்றும் இளைஞர்களுக்காக 80% தனியார் வேலைவாய்ப்பு சட்டத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.

கோவாவில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்டமாக இவரது பிரச்சாரம், கோவாவில் காணப்பட்டு வரும் வேலையின்மை விகிதத்திற்கு எதிராக துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கோவா மாநில இளைஞர்கள், அரசாங்க வேலையை விரும்பினால், யாராவது ஒரு அமைச்சர் அல்லது MLA வை சந்தித்து பேச வேண்டும். லஞ்சம் அல்லது சிபாரிசு இல்லாமல் அரசு வேலை பெறுவது கோவாவில் சாத்தியமில்லை. இனி இந்த நிலை இருக்காது. அனைத்து கோவா இளைஞர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும். கோவாவில் வீட்டுக்கு ஒரு வேலையில்லாத இளைஞருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனுடன் அரசு வேலை கிடைக்கும் வரை இளைஞர்களுக்கு, மாதம் ரூ .3,000 வேலையின்மை உதவித்தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கோவா இளைஞர்களுக்காக 80 சதவீத தனியார் வேலைகளை ஒதுக்கீடு செய்வதற்கான சட்டத்தை இயற்ற இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா சார்ந்த குடும்பங்கள் பல வேலை இழந்துள்ளதால் அவர்களின் வேலைவாய்ப்பு மீட்கப்படும் வரையும் மாதம் ரூ.5,000 கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதே சமயம், சுரங்கத்தை சார்ந்திருக்கும் குடும்பங்கள், சுரங்க தொழில் மீண்டும் தொடங்கும் வரை மாதம் ரூ .5,000 நிதியுதவி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவாவில், திறன் சார்ந்த புதிய பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் மாணவர்கள் விரும்பும் எந்த திறமையையும் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 2022 கோவா சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஐந்து வாக்குப்பதிவு தொடர்பான வாக்குறுதிகளை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பென்சன் – இதோ முழு விபரம்!!
Back to top button
error: