வேலைவாய்ப்பு

ரூ.21000/- சம்பளம் தமிழ்நாடு குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!

ஈரோடு மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில்‌ காலியாக உள்ள சட்டம்‌ சார்ந்த நன்னடத்தை அலுவலர்‌ (1 நபர்‌) பதவியினை பூர்த்தி செய்ய, ஈரோடு மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ கீழ்க்கண்ட கல்வி மற்றும்‌ அனுபவம்‌ உடையவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் – நன்னடத்தை அலுவலர்‌ (Legal/Probation Officer)
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – Offline
விண்ணப்பிக்கும் முறை – Within 15 Days

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BL/LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

இப்பதவியானது ஒப்பந்த நியமன அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம்‌ ரூ.21000/- வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்ப படிவத்தினை http://erode.nic.in/ என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 பணி நாட்களுக்குள்‌ கீழ்க்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்‌. மேலும்‌ விபரங்களுக்கு 0424- 2225010 என்ற அலுவலக தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்‌.

முகவரி :

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு 6,
முன்னால்‌ படைவீரர்‌ மாளிகை,
2வது தளம்‌,ஈரோடு-638001.
தொலைபேசி : 0424 – 22250100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ குறித்த காலத்திற்குள்‌ இவ்வலுவலகத்தில்‌ பெறப்பட வேண்டும்‌. மேலும்‌, அனைத்து தகுதிகளின்‌ அடிப்படையில்‌ இப்பதவியானது நியமனம்‌ செய்யப்படும்‌.

Official PDF Notification – https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2021/08/2021082342.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: