தமிழ்நாடுமாவட்டம்

இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

தமிழகத்தில் குடும்பத்தின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.,23) தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதில் குறிப்பாக, “வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!