வேலைவாய்ப்பு

ரூ.1,12,800/- ஊதியம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு!

சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையான மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது வேலைவாய்ப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் இதய நுரையீரல் மெஷின் ஆபரேட்டர் மற்றும் இதய நுரையீரல் மெஷின் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பதவிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு மொத்தமாக 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2021 ஆகும். மேலும் இப்பதவி பற்றிய விவரங்களை அறிய இப்பக்கத்தின் இறுதிவரை காணவும்.

நிறுவனம் – TN Govt Hospital, Salem
பணியின் பெயர் – Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician
பணியிடங்கள் – 06
கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

இவ்வேலைவாய்ப்பில் Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician போன்ற பதவிகளுக்கான கலிப்பாணியிடத்தினை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு மொத்தமாக 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

இப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது முதல் இருத்தல் வேண்டும். மேலும் பிரிவுகளின் அடிப்படையில் வயது தளர்வுகள் வழங்கப்படும்.

மாத ஊதியம் :

  • இதய நுரையீரல் மெஷின் ஆபரேட்டர்: ரூ 35,600/- முதல் ரூ.1,12,800/- வரை
  • இதய நுரையீரல் மெஷின் தொழில்நுட்ப வல்லுநர்: ரூ 19,500/- முதல் ரூ. 62,000/-வரை

கல்வித்தகுதி :

  • Heart Lung Machine Operator: இதற்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் B.Sc (Cardio Pulmonary Perfusion Care Technology) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Heart Lung Machine Technician: அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பம்ப் டெக்னீஷியனில் ஒரு வருட சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :

இதய நுரையீரல் தாழ்வெப்பநிலை இயந்திரத்தை மூன்று வருடங்களுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தினங்கள் :

  1. அறிவிப்பு வெளியான நாள் : 16.08.2021
  2. விண்ணப்பம் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி : 18.08.2021
  3. விண்ணப்பம் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தங்களின் விண்ணப்பங்களை Dean, Government Mohan Kumaramangalam Medical College Hospital, Salem-636001 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  திருநெல்வேலி இளைஞர்‌ நீதிக்குழுமத்தில் உதவியாளர்‌ வேலைவாய்ப்பு!!
Back to top button
error: