தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்களுக்கு ரூ.1,000 பரிசு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்புடைய மீம்ஸ்களை உருவாக்கும் சிறந்த 10 பேருக்கு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

சமீப காலங்களில் பிரபலமாகி கொண்டிருக்கும் மீம்ஸ்கள் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒரு முக்கிய விஷயமாகும். அந்த வகையில் சினிமா மீதான கருத்துக்கள், கிண்டல்கள், கேலிக்கள் சம்பந்தமாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை தொடர்ந்து தற்போது இவை சமூக அக்கறை கொண்டதாக மாறி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2 வரிகளிலேயே ஒரு முக்கியமான கருத்தை மக்களிடையே மிக எளிமையாக கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த பணியை மீம்ஸ்கள் செய்து கொண்டு வருகிறது.

இந்த மீம்ஸ்களில் அதிகளவு இடம்பெறுவது சினிமாவில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர்கள் தான். அதாவது சினிமாவில் வரும் சில காட்சிகள், வசனங்களை மையமாக வைத்து தான் இவ்வகை மீம்ஸ்கள் உருவாக்கப்படுகிறது. தற்போதெல்லாம் சமூகத்தில் காணப்படும் அவல நிலைகளை மீம்ஸ்கள் மூலம் மிக எளிமையாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருபவர்களுக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாவது கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக மீம்ஸ்களை உருவாக்கும் நபர்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். அந்த வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பிலான மீம்ஸ்களை உருவாக்கும் சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் – நீதிமன்றம் உத்தரவு!!
Back to top button
error: