தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த திட்டத்தை உடனே செயல்படுத்தாவிட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே 7ஆம் தேதி முதல் புதிய முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதற்கு முன்னதாக அந்த கட்சி வாக்குறுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரணம் ரூ.4000, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும் குடும்பத் தலைவி பெயரில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளிவந்ததை அடுத்து பலர் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், திமுக கட்சி வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் போன்றவை தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு காரணமாக மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி வெளியானதால் மாணவர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தவறினால் அதிமுக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: