தமிழ்நாடு

முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சாதி வேறுபாடுகள் இல்லாமல் முன்மாதிரியாக விளங்கும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதி பாகுபாடு பல பகுதிகளில் இல்லாமல் உள்ளது. ஆனால் இன்னும் ஒரு சில கிராமங்களில் சாதி பாகுபாடு குறித்து மக்கள் அவதிப்படும் நிலையில் தான் உள்ளனர். இந்த சாதி பாகுபாடுகளை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான பல முற்போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( 8.9.2021) அறிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளை சட்டபூர்வமாக பாதுகாக்கவும், அவர்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்க சட்டம் இயற்றப்பட உள்ளதாக அறிவித்தார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை முறையாக உறுதி செய்வதற்கு ஏற்கனவே தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்றங்களுடன், கூடுதலாக 4 நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

வன்கொடுமை வழக்குகள் அதிகமாக உள்ள சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பல கிராமங்களில் சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ‘தமிழன் இருக்கும் வரையில் முதல்வர் ஸ்டாலினின் பெயர் இருக்கும்' - துரைமுருகன்
Back to top button
error: