மாவட்டம்

ரோட்டில் “பார்க்கிங்”.. திருச்சி மாநகராட்சி புதிய திட்டம்..

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருப்பது பார்க்கிங் வாகனங்களே…. இதனை ஒழுங்கும்படுத்தும் முயற்சியாக மாநகராட்சி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

திருச்சியின் பிரதான சாலைகளான வில்லியம்ஸ் ரோடு, அலெக்ஸாண்டரியா ரோடு, ஜங்ஷன் ரோடு, பாரதிதாசன் சாலை, தில்லைநகர் சாலை உள்ளிட்ட 22 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பார்கிங் பாலிசி என்ற திட்டத்தை அமுல்படுத்தப்பட உள்ளது.

தோ்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை பார்க்கிங் செய்யலாம். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு இரு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த இடங்களில் சிசிடிவி பொருத்தப்படுவதோடு, பாதுகாவலர்கள் கண்காணிப்பில் இருப்பர். இதன் காரணமாக மாநகராட்சிக்கு வருவாய் பெருகும். போக்குவரத்து இடையூறு குறைக்கப்படும், வாகனங்கள் திருட்டும் தடுக்கப்படும்.

மேலும் இதற்காக ஒரு புதிய “ஆப்“ உருவாக்கப்பட உள்ளது. இந்த ஆப் மூலம் பார்க்கிங்கிற்கு முன்பதிவு செய்யலாம். இந்த திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

loading...
Back to top button
error: Content is protected !!