தமிழ்நாடு

புதிய ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி இன்று சென்னை ராஜ்பவனில் காலை 10.30 மணிக்கு பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்களை குடியரசுத் தலைவர் நியமித்தார். இவர் நாகலாந்து மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றினார். அங்கு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் 76ல் இந்திய காவல் பணியில் சேர்ந்து பல சேவைகளை செய்துள்ளார். அதனை தொடர்ந்து சில காலம் பத்திரிக்கைத் துறையில் இருந்து பல கட்டுரைகளை எழுதினார். இவரது கட்டுரைகள் தேசிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தற்போது தமிழக ஆளுநராக இவர் பதவியேற்றுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆர்.என்.ரவி தமிழகத்தின் 26-வது ஆளுநராக பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஆர்.என்.ரவிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மு.அப்பாவு, தலைமைச் செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

கொரோனா அதிகம் பரவுவதால் சமூக இடைவெளியின் அவசியம் கருதி ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு விழா முடிந்ததும், தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஏற்கனவே பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது முழு நேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்று ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5)
Back to top button
error: