தமிழ்நாடு

புதிய ஆளுநர் ஆக ஆர்.என். ரவி – செப்.18ம் தேதி பதவியேற்பு!!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்கயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அவர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே நாகலாந்தின் ஆளுநராக பதவி வகித்தவர். பீகார் மாநிலத்தில் பிறந்த இவர் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1976ல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றினார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அப்போது ஜம்மு காஷ்மீரில் இருந்த குற்ற கும்பலை அடக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆர்.என். ரவி, 1976-கேரள பிரிவைச் சோந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. 2012-இல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2012 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று தேசிய பாதுகாப்பு குறித்த கட்டுரைகளை எழுதினார். பிறகு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நாகலாந்து ஆளுநராக பதவியேற்றார். பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.என்.ரவியை தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதன் பேரில் செப்டம்பர் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவானது சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: