உலகம்

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி!!

கொரோனா தொற்றின் தீவிர தாக்கத்தை தொடர்ந்து இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மற்றும் நிவாரணம் வழங்குவதற்காகவும் இதுவரை 700 பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக இலங்கை நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சுற்றுலாத்துறை முடங்கியது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் அரிசி 2.5 மடங்கு விலை அதிகரித்துள்ளது. ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் அரிசியானது தற்போது ரூ. 140க்கு மேல் விற்கப்படுகிறது. பால் பவுடர் தட்டுப்பாட்டின் காரணமாக ரூ. 350 க்கு விற்கப்பட்ட பால் பவுடர் ரூ.1000 க்கு விற்கப்படுகிறது.

ரூ. 80 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ. 240 க்கும், ரூ.350 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.1050 க்கும், ஒரு கிலோ பாசிப்பயறு விலை ரூ.150ல் இருந்து தற்போது ரூ.850 ஆகவும், ஒரு கிலோ மஞ்சள் ரூ. 7000 க்கும் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் துயர் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரிசி, சர்க்கரை மற்றும் இதர உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு கடுமையாக தண்டனை அளிக்கவும், அவற்றின் விலைகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: