தமிழ்நாடுமாவட்டம்

அதிரடியாக உயரும் சின்ன வெங்காயம் விலை.. மக்கள் கவலை..

கடந்த சில தினங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் சின்ன வெங்காயம் விலை புதிய உச்சத்தை தொட்டது. தற்போது இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் மிக கடுமையாக மழை பெய்தது. இதனால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது அதனுடைய தாக்கம் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் முதல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த மாதம் மழையின் பாதிப்பால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து கோயம்பேடு மொத்த சந்தை வியாபாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, ஒட்டன்சத்திரம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் சந்தைக்கு வரும். ஒரு நாளுக்கு சுமார் 10 லாரிகள் சின்ன வெங்காயத்தை ஏற்றி வரும். ஆனால் மழையின் பாதிப்பால் வெங்காயத்தின் பயிர்கள் அழுகியது. இதன் காரணமாக வெங்காயம் வரத்து மிகவும் குறைந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 லாரிகள் வருவதே கடினமாகியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.170க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் வரும் தினங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றனர். இந்நிலை சரியாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகுமாம். மேலும் இந்த விலை உயர்வால் அனைவரும் வெங்காயம் வாங்குவதை குறைத்து வருகிறார்கள் என்று விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது நாட்டிலையே குறைந்தபட்சமாக கோவையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!