மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை – கவலை அடையும் நகைப்பிரியர்கள்!

கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்து வந்தது. தற்போது இந்த வாரம் முதல் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத்தொடங்கியது. இதனால் நகை வாங்க காத்திருக்கும் அனைவரும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கம்:
கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பங்கு சந்தை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டது. தற்போது இந்தியா பொருளாதாரம் சீரடைந்து வந்துள்ளது. இருந்தும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த வாரம் முழுவதும் மக்கள் ஆசைக்கேற்ப தங்கத்தின் விலை சரியத்தொடங்கியது.
இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். மேலும் இந்த மாதம் முதல் தற்போது சுபநிகழ்ச்சிகள் பல நடக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத்தொடங்கியது. இதனால் நகை வாங்க காத்திருக்கும் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:
சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.37,528ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 4,691ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை சற்று அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ. 72.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.72,500ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.