தமிழ்நாடு

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு – இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் நெடு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று (செப்டம்பர் 1) முதல் உயர்வை கண்டுள்ளது. அதன் கீழ் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. பொதுவாக தமிழக அரசின் மாநில வாணிப கழகத்தின் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடைபட்டதால் அரசுக்கு நிதி நெருக்கடிகள் ஏற்பட்டது. இதையடுத்து முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட சமயத்தில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி கொடுத்தது. அப்போது, மதுபானங்களின் விலை உயர்வை எட்டும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த சமயம் உயர்த்தப்படாத மதுபானங்களை விலை இன்று (செப்டம்பர் 1) முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்வை கண்டுள்ளது. அதன் படி ஜானி வாக்கர் டபுள் பிளேக் விஸ்கி 750 ML புட்டிகள் ரூ.5,260 என உயர்ந்துள்ளது. இந்த விலை இதுவரை ரூ.4,740 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களில் அதிக விலை கொண்ட ஜானி வாக்கர் புளூ லேபிள் விஸ்கி, ரூ.21,130 லிருந்து ரூ.21,300 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர மற்ற மதுபானங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image 3

image 4


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை?
Back to top button
error: