இந்தியா

SBI ATM கட்டணம் முதல் LPG கேஸ் விலை வரை உயர்வு – ஜூலையில் அமலுக்கு வந்த மாற்றங்கள்!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகள், சிலிண்டர் உட்பட பல்வேறு சேவைகளில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளதான சில மாற்றங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் பல சேவைகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பழைய விதிகள் மாற்றப்படுவதும், புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதும் வழக்கமானது தான். இந்த வரிசையில் தற்போது துவங்கியுள்ள ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சில விதிகள் குறித்ததான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக, அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் இனி வாகன ஓட்டும் திறனை பரிசோதனை செய்யாமலேயே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து மத்திய ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன், டெஸ்ட் பாஸ் செய்த பிறகு டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட உள்ளது. இவை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக, LPG கேஸ் சிலிண்டர் விலை நேற்று (ஜூலை 2) முதல் ரூ.25 அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ரூ.800 லிருந்து 825 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக வங்கிகளில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, ATM இயந்திரங்களில் பணம் எடுத்தல், காசோலை புத்தகங்கள், நிதி சார்ந்த மற்றும் நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு சில குறிப்பிட்ட வரம்புகளில் இலவச கட்டணம் மற்றும் GST கட்டணங்களை சில வங்கிகள் மாற்றியுள்ளன. இதன்படி SBI வங்கி, ஆக்சிஸ் வங்கி, IDBI வங்கி ஆகியவற்றில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: