தமிழ்நாடு

எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடு!!

தமிழகத்தில் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர், தமிழகத்தில் தற்கொலைகள் அதிகமாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். விபத்தில் அதிகமானவர்கள் வந்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 15,000 முதல் 16,000 பேர் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன.

தற்போது விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதில் 15 – 20% பேர் தூக்கிட்டு மற்றவர்கள் எலி மருந்து, பால்டாயில் மற்றும் சாணம் பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. சாணிப் பவுடர் விஷப் பொருட்களின் கலவையாக இருப்பதால் அதனை விரைவில் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று தடை செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து உயிர் பறிக்கும் எலி மருந்து, பால்டாயில் முதலியனவற்றை பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும் எனவும் தனி மனிதர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் முதலியன விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசாணைகளை துறை அலுவலர்கள் மூலம் விடுக்க இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இரண்டு நபர்கள் வந்தால் மட்டுமே எலி மருந்து, பால்டாயில் முதலியன வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் தற்கொலை விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
Back to top button
error: