தமிழ்நாடு

இட ஒதுக்கீடு போராட்டம்.. 4 நாட்களில் ரிசல்ட்.. ராமதாஸ் ஐடியா..

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி டிசம்பர் 1ம் தேதி தொடர் போராட்டங்களை நடத்த பாமக முடிவு செய்துள்ளது, இந்த போராட்டம் குறித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் நடந்த இந்த பொதுக் குழுவில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அதில், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31 வரை முதற்கட்ட தொடர் போராட்டம், ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில் குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும். நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும் என்றார்.

loading...
Back to top button
error: Content is protected !!