உலகம்

கொரோனா தடுப்பூசியை விரைவாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிர் பறிக்கும் வைரசாக உருமாறும்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..

தடுப்பூசியை விரைவாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிர் பறிக்கும் வைரசாக கொரோனா மீண்டும் உருமாறும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாறிய கொரோனாவுக்கு குறைவான செயல்திறனையே கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரேசிலில் பரவும் உருமாறிய கொரோனா ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது.

இந்நிலையில், சார்ஸ் வைரஸ் இன்னும் நம்மை விட்டு போகாத நிலையில் அதனிடையே நாம் வாழ சுட்டிக்காட்டியுள்ள தடுப்பூசி ஆய்வாளர்கள் கொரோனாவும் தமது உருமாற்றங்களை தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும், அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக அளவில் 3 வகையாக உருமாறியுள்ள கொரோனா மீண்டும் உறுமாறாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் வைரஸ் ஆபத்தானதாக உருமாற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!