இந்தியா

கேரளா மாநிலத்தில் ஜனவரி 21 முதல் 1-9ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

கேரளா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் 21 தேதி முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஆன்லைன் கல்வி முறை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு எழுச்சி கண்டு வரும் கொரோனா 3ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு நேற்று (ஜன.14) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வருகின்ற ஜனவரி 21ம் தேதி முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த 2 வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளிகளை திறக்கும் இந்த நடவடிக்கையானது முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவின் கூட்டத்திற்கு பின்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைன் வகுப்புகள் 2 வாரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வகுப்புகள் மேலும் தொரப்படுமா என்பது குறித்து பிப்ரவரி 2ம் வாரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் கொரோனா தொற்று அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது பள்ளிகளை தவிர அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயமாக கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கேரளா மாநிலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலோசனை கூட்டத்தில், ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி பெற்றுள்ளவர்கள் தங்களது பயணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கடைகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றை சமூக இடைவெளியுடன் இயக்குவது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கேரளாவில் கடந்த ஒரு நாளில் சுமார் 16,338 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: