இந்தியா

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவல் வீழ்ச்சியடைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் அனைவரும் 50% திறனுடன் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அதே சமயம், ஆசிரியர்கள் மற்றும் அலுவக ஊழியர்களின் வருகை 100% மாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கு முன் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயர் கல்வி அமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் கீழ்,

  • கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் போது அரசு விடுதிகள் மற்றும் நூலகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருந்தால், தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் தொடங்கலாம்.
  • இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
  • இதற்காக, கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு தனித்தனி கால அட்டவணைகளை தயாரிக்க வேண்டும்.
  • நூலகங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயமாகும்.
  • நூலகத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் 50% திறனுடன் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மற்றும் முதுகலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
  • மாணவர்களுக்கு கொரோனா தொடர்புடைய அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக விடுதியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • விடுதியில் அனுமதி பெறுவதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதல் மற்றும் சுய அறிவிப்பு படிவத்தை நிரப்புவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பெண்கள் மீதான பாலியல் வன்முறை; முதலிடம் வகுக்கும் மாநிலம்!
Back to top button
error: