தமிழ்நாடு

அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் புதுப்பிப்பு – நவம்பர் 14 வரை கால அவகாசம்!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெற புதுப்பித்துக் கொள்ளலாம் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டியலின மாணவர்கள் கல்வி பயில்வதற்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பித்து ஆண்டுதோறும் உதவித்தொகைகள் பெறுகின்றனர். இந்த தொகை பட்டியலின மாணவர்கள் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில பேருதவியாக இருக்கிறது. பள்ளிகளை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 3ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் நிபந்தனைகள் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேர நீங்கள் பயிலும் கல்வி நிறுவங்களிலேயே விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வங்கி விவரங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் அதை புதுப்பிக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க கால அவகாசம் தொடங்குகிறது. நவம்பர் 14 வரை புதுப்பித்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் டிசம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!!!
Back to top button
error: