தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அகற்றம் – தமிழக அரசு ஆணை!!

தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்ட வாரியாக கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதில், தற்போது முழுமையாக விளக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலை தமிழக அரசு ஆணையில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலை தாக்கத்தின் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. தொற்று பாதிப்பு குறைவை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு மண்டலங்களாக தமிழக அரசு கடந்த ஜூலை 23ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக அறிவித்தது.

முன்னதாக ஜூலை 9ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அறிக்கையில், மாநிலத்தில் கொரோனா 2 ம் அலையின் பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராமநாதபுரம், விழுப்புரம், தர்மபுரி, கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிபேட்டை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்பட்டு பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் 85 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகபட்சமாக இருப்பதாகவும், ஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 பகுதி குறைந்த பட்சமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: