தமிழ்நாடுமாவட்டம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு தேதி, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

12-ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் வரும் 16ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 21 வகையான வழிகாட்டு முறைகளையும் அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12 ஆம் வகுப்பிற்கு செய்முறை தேர்வுகள் வரும் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • முகக்கவசம் சமூக இடைவேளி கட்டாயம்.
  • மாணவர்கள் சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
  • சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது.

நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் பின்னதாகவும்,

  • ஆய்வகம் நல்ல முறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • செய்முறை தேர்வு உபகரணங்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், சமூக உபகரணங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அதற்கேற்ற எண்ணிக்கையில், மாணாக்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு மாணாக்கருக்கும் தேவையான இடஅளவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • செய்முறைத் தேர்வின்போது, கதவுகள் மற்றும் ஜன்னல்கள், நன்றாக திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கழிவறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, போதுமான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் உள்ளிட்ட 21 வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: