இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை DA நிலுவைத்தொகை? தகவல் வெளியீடு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை குறித்த அறிவிப்புகள் விரைவில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சுமார் 18 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் DA நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து மத்திய அரசு இந்த மாதம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பலன் கிடைக்கும். அதாவது, லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11880 முதல் ரூ.37554 வரை கிடைக்கும்.

அதே சமயம், லெவல்-13 மற்றும் லெவல்-14 ஊழியர்களுக்கு ரூ.144200 முதல் ரூ.218200 வரை DA பாக்கி வழங்கப்படும். இப்போது மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வெளிவந்துள்ள தகவலின்படி, ஜேசிஎம் தேசிய கவுன்சில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.

எனினும், இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது DA தொகையை மீட்டெடுக்கும் அதே வேளையில், நிலுவையில் உள்ள 18 மாத DA நிலுவைத் தொகையையும் ஒரு முறையில் கொடுக்க வேண்டும் என்று தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் கவுன்சில் (JCM) அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதன் மூலம் லெவல் 1 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ.11880 முதல் ரூ.37554 வரை கிடைக்கும் என்று தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்களின்செயலர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகிறார்.

நிலை 13 ஊழியர்களைப் பொருத்தளவு, அடிப்படை ஊதியம் ரூ1,23,100 முதல் ரூ 2,15,900 வரை வழங்கப்படுகிறது. இப்போது 18 மாத நிலுவைத் தொகை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தவுடன் அரசு ஊழியர்கள் ரூ. 2 லட்சம் வரை பலனை பெறுவார்கள். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இந்த தவணையுடன் 3 சதவீதம் ஆக அதிகரித்தால் இதன் மொத்த தொகை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: