இந்தியா

பிப்.,1 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்து உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் திறக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளது. அந்த உத்தரவில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜம்முவில் பிப்ரவரி 1ம் தேதி முதலும், காஷ்மீரில் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • வளாகங்களின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் வைக்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • அனைத்து மாணவர்களும் ஒருவருக்கொருவர் கிட்டத்தட்ட 2 மீட்டர் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களும், பிற ஊழியர்களும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
  • பாதுகாப்பான நீர், துப்புரவுப் பொருட்கள் மற்றும் போதுமான கழிப்பறைகள் உயர்கல்வி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும்.

Back to top button
error: Content is protected !!