தமிழ்நாடுமாவட்டம்

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி.. உறவினர்கள் போராட்டம்..

பெரம்பலூர் அருகே, கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் சடலத்தை சாலையில் வைத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த மரியஜோசப் என்பவரிடம், தனது நிலத்தை அடமானமாக வைத்த நிலத்தை மீட்க கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை விற்றும் பணம் கொடுத்துள்ளார். ஆனால், நிலத்தை மீண்டும் ஜேசுதாசுக்கு திருப்பி வழங்காதததோடு, கூடுதலாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நிலத்தை திருப்பி தரமுடியும் என மரியஜோசப் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளச்சலுக்கு ஆளான ஜேசுதாஸ், கடந்த 7ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜேசுதாஸ் இறப்பதற்கு முன்பதாக, செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனதுஉயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு காரணம் பணம் மரியஜோசப் தான் என வாக்குமூலம் அளித்து பேசி பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், மரியஜோசப் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த ஜேசுதாஸின் சடலத்தை அன்னமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வைத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Back to top button
error: Content is protected !!