தமிழ்நாடு

32 சுங்கச் சாவடிகள் குறைப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!!

நாடு முழுவதும் 565 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளில் 32 சுங்க சாவடிகளை நீக்க வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் கூறியுள்ளார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் மொத்தம் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும். சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கொண்டு சாலைகள் சீரமைப்பு மற்றும் அவசர உதவி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்திற்குள் உள்நுழையவும், வெளியில் செல்லவும் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இக்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் ஒரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும். மற்றொரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூடப்பட்டதை தொடர்ந்து இன்னும் சில சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 சுங்கச்சாவடிகள் சமீபத்தில் மூடப்பட்டுள்ளது. ‘தமிழ்நாட்டில் மொத்தம் 16 சுங்கச்சாவடிகள் தான் செயல்பட வேண்டும். ஆனால் 48 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. 32 சுங்க சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்துவோம்’ என சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  திருப்பூரில் அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!!
Back to top button
error: