தமிழ்நாடுமாவட்டம்

4 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
Back to top button
error: