தமிழ்நாடு

கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – ஆர்டிஓ முருகேசன் எச்சரிக்கை!!

கொடைக்கானல் மலை & ஆபத்தான பகுதிகளில் டெண்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் டென்ட் மற்றும் கூடாரங்களை அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்து வருகின்றனர். இது சுற்றுலா பயணிகளை அதிகளவு கவரும் என்பதால் புதுப்புது தொழில்கள் தொடங்கி உள்ளன. அங்கு தங்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கூக்கால் பகுதியில் டெண்ட் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் டென்ட் அமைக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில் கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் சந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதில் டென்ட்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெண்ட் அகற்றப்பட்டு இடத்தின் உரிமையாளர் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து ”கொடைக்கானல் மலைப்பகுதியில் டெண்ட் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பது குற்றம். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கூடாரங்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆர்டிஓ முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:  முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: