இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள 7 வங்கி விடுமுறை நாட்கள் – RBI பட்டியல்!!

இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகம் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களை விடுமுறை தினமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மாதத்தின் இறுதி பகுதியை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள விடுமுறை நாட்களின் விவரங்களை காண்போம்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்னதாக ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 15 நாட்கள் பட்டியலில் இருந்தது. அவற்றில் 7 நாட்கள் மட்டுமே வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள். மற்ற 8 நாட்கள் நாடு முழுவதும் மாநில வாரியாக கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகை, மதம் சார்ந்த விழாக்கள் ஆகும். மாதத்தின் முன்பகுதியில் பல்வேறு விடுமுறைகள் முடிந்து விட்ட நிலையில், மாத இறுதியில் இன்னும் மீதமுள்ள விடுமுறை நாட்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28ம் தேதி நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 22 மற்றும் 29 ஞாயிற்று கிழமை ஆகும். மற்ற நாட்கள் பண்டிகை நாட்களாக உள்ளது. இந்த பண்டிகைகள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. மாநில வாரியாக வேறு தேதிகளில் சிறப்பிக்கப்படுகிறது. இதனால் வங்கிகள் ஒரே நாட்களில் நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

RBI பட்டியல்:

ஆகஸ்ட் 21, 2021 – திருவோணம் (திருவனந்தபுரம் மற்றும் கொச்சி)

ஆகஸ்ட் 22, 2021 – ஞாயிறு

ஆகஸ்ட் 23, 2021 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (திருவனந்தபுரம் மற்றும் கொச்சி)

ஆகஸ்ட் 28, 2021 – நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 29, 2021 – ஞாயிறு

ஆகஸ்ட் 30, 2021 – ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி (அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் கேங்டாக்)

ஆகஸ்ட் 31, 2021 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (ஹைதராபாத்)


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் தேதி அறிவிப்பு!
Back to top button
error: