ஆன்மீகம்இந்தியா

திருப்பதி கோவிலில் நாளை ரத சப்தமி விழா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நாளை நடைபெறவுள்ளது. ‘மினி பிரம்மோற்சவம்’ போல் நடைபெறவுள்ள இந்த விழாவில், உற்சவர் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்று 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆகையால், இவ்விழாவை ‘மினி பிரம்மோற்சவம்’ என்றும் அழைக்கலாம். அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகனமாக சூரிய பிரபை வாகனம் உலா வருகிறது. காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வாகன ஊர்வலம் தொடங்குகிறது.

காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன ஊர்வலம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகன ஊர்வலம், மதியம் 1 மணியில் இருந்து 2 மணிவரை அனுமந்த வாகன ஊர்வலம் மற்றும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை சக்கர ஸ்நானம் நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விருட்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ஊர்வலமாக செல்லும். இவற்றில் மலையப்பசாமி அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Back to top button
error: Content is protected !!