வேலைவாய்ப்பு

ரூ.10,019/- உதவித்தொகையில் NLC நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு பயிற்சி பெற முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. அதில் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கு என 75 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
  • 10 ஆம் தேர்ச்சி/ உயிரியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்னர் இப்பயிற்சி பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை உதவித்தொகை வழங்கப்படும்
  • பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இறுதி தேதிக்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: