தமிழ்நாடு

அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை.. தமிழருவி மணியன்..

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பலர் என்னுடன் இணைந்து பணிபுரிய தொடர்பு கொண்டு வருகிறார்கள்.ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். பாழ்பட்ட அரசியலை பழுது பார்க்கவே ரஜினி அரசியலுக்கு வர முயன்றார். கால சூழல் அதற்கு இடம் தரவில்லை. இப்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்து இருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடவும் இல்லை.

இந்த நிலையில் சிஸ்டத்தை சீரழித்து இருப்பவர்களிடமே ரசிகர்கள் சிலர் சரண் அடைந்து இருப்பதை கண்டு வருந்துகிறேன். அடுத்த மாதம் 7-ந்தேதி திருப்பூரில் காந்திய மக்கள் இயக்க பொதுக்குழு கூடுகிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும் என அவர் கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!